திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது

பழவூர், மகாராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் இரவில் தனது வீட்டின் முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிளை காணவில்லை.;

Update:2025-05-28 14:30 IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்பு நடு இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து மனோகரன் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் செட்டிகுளத்தை சேர்ந்த அர்ஜுன்(19), மகாராஜபுரத்தைச் சேர்ந்த அபினேஷ்(21) மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகிய 4 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 4 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் நேற்று (27.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்