‘கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்’ விஜயகாந்துக்கு அண்ணாமலை புகழாரம்

விஜயகாந்தின் துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-25 10:45 IST

சென்னை,

மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள  செய்தியில்,

தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.

கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது. "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்