எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

எடப்பாடி பழனிசாமி அமைக்கும் கூட்டணி குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

Update:2025-10-09 10:39 IST

கோவை,

கோவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி. நோயாளிகளை மருத்துவப் பயனாளர்கள் என அழைப்பதில் என்ன பிழை இருக்கு?. எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள். பாக்கெட்டில் எம்.ஜி.ஆர் படம் வைக்கவே பயப்படுகிறீர்கள். 10 ஆண்டுகளில் எந்த திட்டத்திற்கு அவர் பெயர் வைத்தீர்கள்?.

2026-ல் எடப்பாடி பழனிசாமி அமைப்பது வலுவான கூட்டணியா, நஞ்சு போன கூட்டணியா, அல்லது தமிழ்நாட்டில் மொத்தமாக தோற்கப்போகும் கூட்டணியா என ஜோதிடம் சொல்ல முடியாது. திமுக தலைமையிலான கூட்டணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்