தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-12-13 13:29 IST

தூத்துக்குடியில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக படகில் ஏற்றிக் கொண்டிருந்த பீடி இலைகளை, கடத்தல் கும்பல் போலீசாரை பார்த்ததும் அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு கிடந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்