சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தீவிர ஆய்வின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது;

Update:2025-06-29 19:52 IST

சென்னை,

இந்தியாவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன. மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம இமெயில் வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்