சென்னை: நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - அதிர்ச்சி சம்பவம்
கார் தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சென்னை பெசன்ட் நகரில் உள்ள சாலையில் நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரில் திடீரென தீப்பற்றியது.
இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்தவர்கள் உடனடியாக சாலையில் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கினர். ஆனால், எஞ்சினில் பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் கருகி நாசமானது. அதேவேலை நல்வாய்ப்பாக காரில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த கார் தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.