தூத்துக்குடியில் கால்நடைகள் சாலை மறியல்: போக்குவரத்துக்கு இடையூறு
தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் அருகில் உள்ள சாலை போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலை ஆகும். இந்த பகுதியில் பள்ளிகள் செயல்பட்டு வருவதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் இந்தச் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மாடுகளை பிடிக்க மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.