விஜய் மக்கள் சந்திப்பு திட்டத்தில் மாற்றம்.. சென்னையில் பிரசாரம்.. எப்போது தெரியுமா..?

பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நாளில் 2 ஊர்களுக்கு மட்டும் பயணிக்க விஜய் முடிவு செய்து இருக்கிறார்.;

Update:2025-09-26 06:45 IST

கோப்புப்படம்

சென்னை,

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தீவிர முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளார். தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார்.

அதனைத்தொடர்ந்து 20-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. மக்கள் வெள்ளத்தில் விஜய் சென்ற பிரசார வாகனம் நீந்தி சென்றது. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்ற விவாதமும் தற்போது வலைத்தளங்களில் தொடங்கி வைத்துள்ளது.

ஒரே நாளில் 3 ஊர் மக்களை சந்திக்கும் திட்டத்தில் விஜய் மாற்றம் செய்து இருக்கிறார். மக்கள் அதிகளவில் திரண்டு வருவதால் நேரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நாளில் 2 ஊர்களுக்கு மட்டும் பயணிக்க விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதனிடையே விஜயின் மக்கள் சந்திப்பு பிரசார திட்டம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை மக்கள் சந்திப்பு நீடிக்கப்பட்டு உள்ளது. அதற்கான சுற்றுப்பயண பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அக்டோபர் 5-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை,

11-ந்தேதி புதுச்சேரி, கடலூர்,

18-ந்தேதி தூத்துக்குடி, நெல்லை

25-ந்தேதி திருப்பூர், ஈரோடு,

நவம்பர் 1-ந்தேதி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,

8-ந்தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,

15-ந்தேதி விழுப்புரம், திருவண்ணாமலை,

22-ந்தேதி சேலம், தர்மபுரி,

29-ந்தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை,

டிசம்பர் 7-ந்தேதி புதுக்கோட்டை, திண்டுக்கல்,

13-ந்தேதி சிவகங்கை, ராமநாதபுரம்,

20-ந்தேதி திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய இடங்க ளில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்துகிறார்.

தொடர்ந்து, 2026 பொங்கலுக்கு பிறகு ஜனவரி 24-ந்தேதி மதுரை, தேனி,

31-ந்தேதி கன்னியாகுமரி,

பிப்ரவரி 7-ந்தேதி தென்காசி, விருதுநகர்,

14-ந்தேதி கோவை, நீலகிரி,

21-ந்தேதி செங்கல்பட்டு, சென்னை என விஜய் மக்கள் சந்திப்பு பிரசார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்