சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு-ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update:2025-12-11 07:58 IST

சென்னை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் ஆகியோருக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தண்டனை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கக்கோரியும் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்