தமிழகத்தை உலுக்கிய இரட்டை ஆணவக் கொலை: கைதான வினோத் குற்றவாளி என தீர்ப்பு
சாதி மாறி மணம் முடித்த தம்பியை அவரது மனைவியுடன் கொன்ற சகோதரரை, குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;
கோவை,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கடந்த 2019ம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் - வர்ஷினி பிரியா ஆகியோரை கொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் வினோத்குமார் குற்றவாளி என்று கோவை எஸ்.சி.,எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொலை வழக்கில் கைதான நான்கு பேரில் மூன்று (கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ்) பேர் விடுவிக்கப்படுவதாகவும், ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரட்டை ஆணவப் படுகொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் வினோத்குமாருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கப்படலாம் என்பதால், தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.