தொடர் கனமழை: ஊட்டி மலை ரெயில் சேவை இன்று ரத்து

ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மண் சரிந்து காணப்பட்டது.;

Update:2025-10-19 09:23 IST

ஊட்டி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

தொடர் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் பாதை தண்டவாளத்தில் 10 இடங்களில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்தன. இதில் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மண் சரிந்து காணப்பட்டது. தகவல் அறிந்ததும் மரங்கள் மற்றும் மண் அகற்றும் பணி நடந்தது. இதன்காரணமாக மலை ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஊட்டி வந்தது.

இந்த நிலையில், கனமழை காரணமாக ஹில்குரோவ் - அடர்லி இடயே தண்டவாளத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மலை ரெயில் மற்றும் விடுமுறைக்கால சிறப்பு மலை ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்