மாணவனை கடத்தி பாலியல் தொல்லை; அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கோர்ட்டு அளித்த தீர்ப்பு
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
திருவாருர்,
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் 10 ம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கன்வாடி ஊழியர் லலிதாவுக்கு (வயது 35)எதிராக புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடைபெற்றது.
இந்நிலையில், பள்ளி மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.