தி.மு.க. செங்கல்லை எடுத்தது; நாங்கள் செங்கோலை எடுப்போம் - தமிழிசை சவால்

தமிழகத்தில் இரட்டை இலை யோடு தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;

Update:2025-11-30 18:28 IST

சென்னை,

தமிழக பா.ஜனதாவின் அனைத்து அணிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மாநாடு கும்பகோணத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் அகில இந்திய அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேர்தல் பொறுப் பாளர் பாண்டே, தமிழக பா.அ பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்பட பலர் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த தேர்தலில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கல்லை காட்டி பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டி சவால் விடுத்து பேசினார். அவர் பேசியதாவது:-

செங்கல்லை காட்டி வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். நான் சவால் விட்டு சொல்கிறேன். எங்களிடம் செங்கோல் இருக்கிறது. நாங்கள் இந்த தேர்தலில் செங்கோலை வைத்து பிரசாரம் செய்வோம்.நாங்கள் உலகமே வியந்து பார்க்கும் பிரதமர் மோடி தலைமையில் இறங்குகிறோம். வருகிற தேர்தலில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ தமிழகத்தில் இரட்டை இலை யோடு தாமரை மலர்ந்தே தீரும்.

எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடியை அழைத்து வந்து தமிழக சட்டமன்றத்திலும் வெற்றி செங்கோலை நிறுவி வெற்றியை கொண்டாடுவோம். பொறுப்பாளர்கள் இங்கே அமர்ந்துள்ள அனைவரும் எம்.பி, எம்.எல்.ஏ.க் களாக உயரும் தகுதி பெற்றவர்கள். நானும் 1999-ல் இந்த இயக்கத்தில் இணைந்து மாவட்ட மருத்துவ பிரிவு பொறுப்பு வகித்துதான் உயர்ந்த இடத்துக்கு வந்தி ருக்கிறேன். உழைப்பாளர் களை இந்த இயக்கம் ஒரு போதும் கை விடாது. வருகிற தேர்தல் நமக்கான தேர்தல். தேசத்தை திறம்பட ஆளும் கட்சிதான் தமிழகத் திலும் அ.தி.மு.க. கூட்டணியில் நல்லாட்சியை தரப் போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்