சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

சூடாபெடரின் என்ற போதைப்பொருளை சென்னை தெற்கு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update:2025-06-27 20:46 IST

சென்னையில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 கோடி மதிப்பிலான 2.2 கிலோ சூடாபெடரின் என்ற போதைப்பொருளை சென்னை தெற்கு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் வைத்திருந்த பீர்முகமது, ரகுமான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஏழு கிணறைச் சேர்ந்த கமார் அலி என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்