அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி: டிடிவி தினகரன் பேட்டி

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி என்று டிடிவி தினகரன் கூறினார்.;

Update:2025-10-30 13:55 IST

பசும்பொன்,

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

“தேவர் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டு அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம். அதிமுகவில் பிரிந்த சக்திகள் ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையில் இன்று ஒன்று கூடியுள்ளோம். தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அணுப்புவோம். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்று தேவர் நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம்.

ஒருங்கிணைப்பு பணியில் சசிகலாவும் இணைவார். போக்குவரத்து நெருக்கடி காரணமாக சசிகலா வருவதில் தாமதம் ஆகிறது. பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால்தான் மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்று சொன்னேன்; மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று நான் சொல்லவில்லை” என்று கூறினார்.

அதன்பின்னர் டிடிவி தினகரன் பேசியதாவது:-

கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையன். எங்கள் ஒருங்கிணைப்பு பணி தொடரும். துரோகத்தை வீழ்த்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர அதிமுகவினரை ஒருங்கிணைப்போம். ஒருங்கிணைப்பு பணியில் செங்கோட்டையன் எங்களுடன் கைகோர்த்துள்ளார். தேர்தலில் இணைந்து பணியாற்ற மூவரும் இணைந்துள்ளோம்.

அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையில் நின்று மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டுமென சபதம் எடுத்திருக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி; அவரை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம். வாக்களர் சிறப்பு தீவிர திருத்தத்தால் குழப்பம் ஏற்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து 3 பேரும் இணைந்ததால் ‘என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி தான்’ என செங்கோட்டையன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்