விருதுநகரில் கனமழை: வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;

Update:2025-10-20 14:50 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கீழாண்மறைநாடு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து ஆற்றுநீர் செல்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் சிரமமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்