வெளுத்து வாங்கிய கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

மும்பையில் இருந்து சென்னையில் தரை இறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்கு திரும்பி அனுப்பப்பட்டது.;

Update:2025-04-16 12:55 IST

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணிக்கு மேல், திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

அதன்படி, மும்பையில் இருந்து 145 பயணிகளுடன், சென்னைக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கவுகாத்தியிலிருந்து, 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயன்கள் விமானம், பெங்களூரில் இருந்து125 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 5 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து நீண்ட நேரத்திற்கு பின்பு தரையிறங்கின.

மும்பையில் இருந்து, சென்னைக்கு தரையிறங்க வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருவுக்கு திருப்பி மும்பையில் இருந்து சென்னையில் தரை இறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்கு திரும்பி அனுப்பப்பட்டது.

. அதைப்போல் டெல்லி, மும்பை, கொச்சி, கோவை, தோகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. திடீர் மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்