திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் கைது: நெல்லையில் போராட்டம்
திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று மாலை இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 18 பேரை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர்.