தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர்.;
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். தமிழக கவர்னர் மாளிகை சென்னை கிண்டியில் உள்ளது.
இந்நிலையில், கவர்னர் மாளிகைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கவர்னர் மாளிகையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.