அமித்ஷாவை இபிஎஸ் வெளிப்படையாகவே சந்தித்தார்: மறைக்க எதுவும் இல்லை: அண்ணாமலை

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை பாதுகாத்தது பாஜகதான் என்று பழனிசாமி கூறியது வரவேற்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்தார்;

Update:2025-09-18 15:53 IST

பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசியிருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பு முடிந்த பிறகு காரில் தங்கியிருந்த ஒட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, முகத்தை மூடியபடி சென்றதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோவில் எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை கைக்குட்டையால் மூடியது போல பார்ப்பதற்கு இருந்தது. எனினும் இது தொடர்பாக விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியே வரும்போது என் முகத்தை துடைத்தேன்; அதை எடுத்து அரசியல் செய்துள்ளனர். ஒரு முதலமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல. முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு எள் முனை அளவும் கிடையாது. முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது? ” என்றார்.

இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தினை முன்வைத்து இருக்கிறார். அண்ணாமலை கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை பாதுகாத்தது பாஜகதான் என்று பழனிசாமி கூறியது வரவேற்கத்தக்கது” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்