22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பழநி முருகன் கோவிலில் வரும் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.;

Update:2025-10-15 11:11 IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற அக்டோபர் 22ம் தேதி உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா ெதாடங்குகிறது. அன்று முதல் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு நடக்கும்.

6-ம் நாளான அக்டோபர் 27ம் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி, மாலையில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகியோரை சின்ன குமாரசுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

அக்டோபர் 28ம் ேததி முருகன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்