கன்னியாகுமரி: ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்- 2 பேர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சங்கர் மற்றும் போலீசார் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-10-01 22:06 IST

கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சங்கர் மற்றும் போலீசார் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் லாரியில் ஜல்லிக்கற்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதி சீட்டை டிரைவரிடம் வாங்கி போலீசார் ஆய்வு செய்து போது அது போலியானது என தெரியவந்தது. இதற்கிடையே லாரி டிரைவர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து கனிமள கடத்தல் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்