அரசு பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

மாணவி தரப்பில் அளித்த புகாரின்பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.;

Update:2026-01-06 02:34 IST

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாணவி பள்ளிக்கூடத்தில் செயல்முறை பயிற்சிக்கு தேவையான பொருட்களை வால்பாறையில் உள்ள கடைக்கு வந்து வாங்கிவிட்டு, வீட்டுக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறி சென்றார்.

அப்போது அதேபஸ்சில், வால்பாறையில் பேக்கரியில் ேவலை பார்க்கும் சோலையாறு 3-வது டிவிசனை சேர்ந்த சந்தோஷ்(வயது 22) என்பவர் பயணித்தார். தொடர்ந்து அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவி கல்லாறு பிரிவு பகுதியில் வைத்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது சந்தோசும் பஸ்சில் இருந்து இறங்கி பின்தொடர்ந்து மாணவி மீது கல் வீசியுள்ளார். இதில் மாணவி காயமடைந்து சத்தம்போடவே, அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். இதையடுத்து சந்தோஷ் தப்பியோடிவிட்டார். தொடர்ந்து காயமடைந்த மாணவி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த மாணவி தரப்பில் அளித்த புகாரின்பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வால்பாறை அனைத்து மகளிர் போலீசார், சந்தோசை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்