சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update:2025-04-04 20:22 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமம், பாலமாநகரைச் சேர்ந்த ஹரிதாஸ் (வயது 32) என்பவர் 1.4.2025 அன்று இரவு தனது மனைவி சுகந்தி, மூத்த மகன் லியோ டேனியல் மற்றும் இளைய மகன் ஜோ.டேனியல் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காயார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் காப்பு காட்டு வளைவின் அருகில் கேளம்பாக்கத்தில் இருந்து காயார் கிராமத்தை நோக்கி எதிர் திசையில் வந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ஹரிதாஸ் மற்றும் அவரது மூத்த மகன் செல்வன்.லியோ டேனியல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மனைவி சுகந்தி மற்றும் ஜோ டேனியல் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுகந்தி சிகிச்சை பலனின்றி 2.4.2025 அன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த சிறுவனுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்