நெல்லை: சாலையில் நடந்து சென்றவரை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் நடந்து சென்ற நபரை வழிமறித்த வாலிபர், அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்ததோடு மிரட்டல் விடுத்தார்.;
திருநெல்வேலி மாநகரம், சிந்துபூந்துறை நாடார் சங்கம் அருகே நேற்று முன்தினம் (27.04.2025) சந்திப்பு மேகலிங்கபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த குற்றாலிங்கதேவர் மகன் கஜேந்திரன் (வயது 52) நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (23), கஜேந்திரனுடைய சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்ததோடு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை செய்தனர்.