தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி வாராந்திர ஓய்விற்கான கியூ.ஆர்.கோடு அனைத்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் வாராந்திர ஓய்வு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அதனை தொழில்நுட்ப ரீதியாக எளிதாக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று WEEK-OFF CODE எனும் புதிய QR Code முறையை அறிமுகம் செய்தார்.
மேலும் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி இந்த QR Code அனைத்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன QR Code-ஐ காவல்துறையினர் தங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து தங்களுக்கான வாராந்திர ஓய்வு நாளை எடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி பதிவு செய்தால் அது நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் ஒப்புதலுடன் ஓய்வு வழங்கும் வகையில் இந்த QR Code வசதி செய்யப்பட்டுள்ளது.
மேற்சொன்னவாறு மாவட்ட எஸ்.பி. முன்னெடுப்பின்படி உருவாக்கப்பட்ட இந்த வாராந்திர ஓய்வுக்காக கியூ.ஆர்.கோடு முறை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.