இன்ஸ்டாகிராம் பழக்கம்... காதல் தோல்வியால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.;

Update:2025-06-04 12:40 IST

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சரிகா(வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் சரிகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த வாலிபர் சரிகாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையில் அந்த வாலிபர் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சரிகா மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

வீட்டில் தனியாக இருந்த சரிகா திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் தோல்வியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்