சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவி.பச்சமுத்து, அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ்.செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைவர் அண்ணா.சரவணன், யாதவ மகாசபை மாநில செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில இணைப்பொதுச் செயலாளர் வீ.தமிழரசன், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.