செங்கோட்டையன் நெல்லையில் போட்டியிட போகிறாரா? - நயினார் நாகேந்திரன் பதில்
செங்கோட்டையன் எனக்கு மிக மிக வேண்டியவர் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.;
காஞ்சிபுரம்,
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனும் பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அதன்பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
செங்கோட்டையன் எனக்கு மிக மிக வேண்டியவர். அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் ஒரு நியாயமான விஷயத்தை சொன்னேன். அவரும் இன்றைக்கு ஒரு இயக்கத்தில் போய் சேர்ந்திருக்கிறார். அந்த இயக்கம் இன்னும் வளரவில்லை.
எடுத்தவுடனே நாளைக்கு ஆட்சியிலே வருவோம் அப்படின்னு சொன்னால், அது எந்த விதத்திலும் நியாயம் என்றுதான் நான் கேட்டேன். என்னை டெபாசிட் இழக்க செய்வதற்கு, அவர் நெல்லையில் போட்டியிட போகிறாரா? என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.