கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, வாராந்திர சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, பின்வரும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:-
- கோயம்புத்தூர் - ராஜஸ்தான் இடையே (வண்டி எண்: 06181) வருகிற நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 4 ஆகிய (வியாழக்கிழமைகளில்) தேதிகளில் காலை 2.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் இரவு 11.20 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் மடார் ரெயில் நிலையம் வந்து சேரும்.
- ராஜஸ்தான் - கோயம்புத்தூர் இடையே (வண்டி எண்: 06182 ) வருகிற நவம்பர் 16,23,30 மற்றும் டிசம்பர் 7 ஆகிய (ஞாயிற்றுக்கிழமைகளில்) தேதிகளில் இரவு 11.50 மணிக்கு ராஜஸ்தானில் மடாரில் இருந்து புறப்பட்டு நான்காவது நாள் காலை 8.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (04.11.2025) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.