நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-03 08:22 IST


தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி வருகிறது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலானது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்