பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.;

Update:2025-06-02 17:55 IST

கோப்புப்படம் 

சென்னை,

பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.கி.மீ தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்