தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 5 வாலிபர்கள் கைது- பைக் பறிமுதல்

தாளமுத்துநகர், ஒத்தவீடு சுனாமி காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.;

Update:2025-06-07 18:51 IST

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒத்தவீடு சுனாமி காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மேலூரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் மகராஜன் (வயது 21), மாதவன் காலனி இசக்கிமுத்து மகன் சந்தனராஜ்(18) எனத் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிலுவைப்பட்டி, விநாயகர் கோவில் உப்பு சங்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தாளமுத்துநகர் சுனாமி குடியிருப்பு உத்தாண்டராமன் மகன் சரவணவேல்(19), ஜாகிர்உசேன் நகர் ரமேஷ் மகன் அஸ்வின்(19), சிலுவைபட்டி மேற்கு சுனாமி காலனி இசக்கிமுத்து மகன் சுப்பிரமணியன்(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்