திருநெல்வேலி: கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update:2025-10-15 08:10 IST

திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் மாரிமுத்து (வயது 30) தாலுகா காவல் நிலைய சரக பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், வைராவிகிணறு, நடுத்தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் அஜீத்குமார்(27) கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகிய 2 பேரும் மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்