திருநெல்வேலி: குளத்தங்கரையில் மரம் வெட்டி திருட முயற்சி- வாலிபர் கைது

கோபாலசமுத்திரம், நம்பினேரி குளத்தங்கரை அருகே களக்காடு, உப்பூரணியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் சிலர் மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் திருட முயற்சித்துள்ளனர்.;

Update:2025-05-28 16:24 IST

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியான, கோபாலசமுத்திரம், நம்பினேரி குளத்தங்கரை அருகே நேற்று (27.5.2025) களக்காடு, உப்பூரணியை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) மற்றும் சிலர் மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் திருட முயற்சித்துள்ளனர். இதுகுறித்து சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பிரிவு, உதவி பொறியாளர் ராஜேஸ்வரி, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் களக்காடு, உப்பூரணியை சேர்ந்த அஜித்குமார் மரக்கட்டைகளை திருட முயற்சிப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, அஜித்குமாரை சப்-இன்ஸ்பெக்டர் நேற்று (27.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்