தீபாவளி முடிந்து பள்ளிகள் திறப்பு: திருப்பூரில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிலிருந்து வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட தொடங்கின. ஆனால் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் இந்த எண்ணிக்கை மிகமிக குறைவாக இருந்தது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்னும் முழுமையாக திருப்பூருக்கு திரும்பாததால் இந்தநிலை இருந்தது. மாநகராட்சி பள்ளிகளில் இன்று 60 சதவீத (பாதியளவு) மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
சூரசம்ஹாரத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 26ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சூரசம்ஹாரம் நிறைவடைந்தபின் பக்தர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 27ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
'அந்தப் படத்தால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்'...அனுபமா பரமேஸ்வரன்
பைசன் படத்தின் தெலுங்கு புரமோஷனின்போது , தனது பரதா படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் அனுபமா பகிர்ந்து கொண்டார்.
இந்த பாலிவுட் நடிகையுடன் நடிக்க ஆசைப்படும் சரத்குமார்
டியூட் பட வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் ரசிகர்களிடம் கலகலப்பாக பேசினார்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பட அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் விரைவில் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர். இந்த மல்டிஸ்டாரர் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது தெரியவில்லை என்றாலும், எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நயன் சரிகாவின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா?
'ஆய்', ’கா’, ’கம் கம் கணேஷா’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நயன் சரிகா, இப்போது ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக தனது அடுத்த படத்தில் நடிக்கிறார்.