இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 24-10-2025

Update:2025-10-24 09:17 IST
Live Updates - Page 4
2025-10-24 04:20 GMT

தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.171-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

2025-10-24 04:01 GMT

'நான் விவாகரத்து பெற்றபோது அவர்கள் கொண்டாடினார்கள்'...சமந்தா

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சமந்தா, பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன். நான் சிக்கலில் இருந்தபோது, சிலர் அதை கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் வந்தபோது கேலி செய்தனர், விவாகரத்தின் போது கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்து எனக்கு மனம் வலித்தது," என்றார்.

2025-10-24 03:59 GMT

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு வந்த அடுத்த சிக்கல்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

2025-10-24 03:58 GMT

ரூ.15 கோடி பட்ஜெட்...ரூ.900 கோடிக்கு மேல் வசூல்...பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த படம்...எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு எந்த பரபரப்பும் இல்லை.  அதிக நட்சத்திர நடிகர்களும் இல்லை. அதிக புரமோஷனும் இல்லை. படம் எந்த ஆரவாரமும் இல்லாமல் திரையரங்குகளுக்குள் நுழைந்தது. பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 

2025-10-24 03:57 GMT

அந்த இரண்டு படங்களை விட 'டியூட்' அதிக வசூல் செய்துள்ளது - பிரதீப் ரங்கநாதன்

முன்னதாக நடந்த 'டியூட்' படவிழா ஒன்றில் தனது முந்தைய 2 படங்களை விட ‘டியூட்’ தெலுங்கில் அதிக வசூல் செய்துள்ளதாக பிரதீப் கூறினார். 

2025-10-24 03:56 GMT

’ராயன் படத்தை தவறவிட்ட மற்றொரு நடிகர்

ராயன் படத்தில் சந்தீப் கிஷனின் கதாபாத்திரத்தில் தான் நடிக்கவிருந்ததாக விஷ்ணு விஷால் கூறினார்.

2025-10-24 03:54 GMT

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு

சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியே திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 55,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

2025-10-24 03:54 GMT

’சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு’...வைரலாகும் ’ஸ்பிரிட்’ படத்தின் வீடியோ

பிரபாஸ், தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' ஆகிய படங்களில் மும்முரமாக உள்ளார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ள 'ஸ்பிரிட்' படமும் அதில் ஒன்று.

2025-10-24 03:53 GMT

வைரலாகும் ஸ்ரீலீலாவின் "சூப்பர் டூப்பர்" பாடல் 

பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

2025-10-24 03:53 GMT

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என்று மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை வெளியிடவேண்டும். தவறினால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்