புத்தாண்டின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
2026-ம் ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம், குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இறங்குமுகத்திலேயே இருக்கிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.256-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இன்று புத்தாண்டு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து, இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய புத்தாண்டு: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்த நிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது.