திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று இந்த வழக்கு குறித்த விசாரணையை தொடங்கினார்.
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ. அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (04-07-2025)
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
கள்ளக்குறிச்சி: முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூரில் முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாரிசு குறித்து அறிவித்த தலாய் லாமா.. நிராகரித்த சீனா
திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் தனது வாரிசு அதாவது அடுத்த தலாய் லாமா குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
அதன்படி தனது வாரிசை அதாவது தலாய் லாமாவின் மறுபிறவியை தனது 'காடன் போட்ராங்' அறக்கட்டளைதான் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் எனவும், தனக்குப்பின்னும் தனது அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
பாலி தீவில் படகு கடலில் மூழ்கி விபத்து: 2 பேர் பலி.. மாயமான 43 பேரின் கதி என்ன..?
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் பயங்கர தீ விபத்து
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வேகமாக பற்றி எரிந்த தீ, பல கடைகளுக்கும் பரவியது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.9,105-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயை பயன்படுத்தி கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
துலாம்
வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பணப்புழக்கம் இருக்கும்.அதில் ஒரு பகுதியை எடுத்து சேமிக்கத் துவங்குவர். உறவினர்கள் வந்து போவர். புதுமண தம்பதிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வதும் மௌனத்தை கையாள்வதும் நல்ல புரிதலை உருவாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா