நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்
நேபாளத்தில் கலவரங்கள் நீடிக்கும் நிலையில் ராணுவம் களமிறங்கி உள்ளது. இதன்படி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக நேபாள ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. வன்முறை உள்ளிட்ட அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர நேபாள ராணுவம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.5,640 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒருபுறம் தங்கம் விலையும், மற்றொரு பக்கம் வெள்ளி விலையும் ‘கிடுகிடு'வென அதிகரித்து வரும் சூழலில், இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி
இந்தியா மற்றும் அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உடன் பேச ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கொடைக்கானலில் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 பெட்டிகளுடன் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் - நாளை முதல் இயக்கம்
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். முன்னதாக பீகாரில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைதேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், 65 லட்சத்துக்கும் மேற்பட்டவாக்காளர்களின் பெயர்கள்நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடியுடன் விரைவில் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது: இருநாடுகளுக்கு இடையேயன வார்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்; 20 பேர் பலி
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யாரோவா கிராமம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனை கொடூரமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். மேலும் ரஷியாவை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கை தேவை என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கன்னி
உழைப்பால் முன்னேற்றம் பெறுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்