நான் இருக்கும் இடத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது - ராமதாஸ் குற்றச்சாட்டு
விருதாச்சலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்.
அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வந்தது.” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் - வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கடுமையாக சாடிய அஜித் தோவல்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “9 தீவிரவாதிகள் இருந்த இடத்தை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்கி அழித்தோம். இன்று சிறந்த கல்வி, சிறந்த தொழில்நுட்பம் நிறைந்த நாடாக இந்தியா மாறி உள்ளது. பொருளாதார ரீதியாக பெருமளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது, பாதுகாப்பு துறைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது” என்று அஜித் தோவல் கூறினார்.
நன்றி மறந்தவர் வைகோ.. மதிமுகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது அம்மா - ஜெயக்குமார்
ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வைகோவை தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும். ஆனால் நன்றி மறந்தவர் வைகோ. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் மதிமுகவுக்கு அங்கீகாரமே கிடைத்தது. எல்லாவற்றையும் மறந்து விட்டு மறைந்த தலைவரை இழிவுபடுத்துவது அழகல்ல” என்று ஜெயக்குமார் கூறினார்.
3 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வரும் 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் - வதந்தி என அவரது மகன் விளக்கம்
பாடகி ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் ஆனந்த் போஸ்லே விளக்கம் அளித்துள்ளார்.
ஜூலை 1-ம் தேதி ஆஷா போஸ்லே இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அந்த தகவல் உண்மையல்ல என ஆஷா போஸ்லேயின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
3வது டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான அணுகுமுறை: இங்கிலாந்து அணிக்கு டிராட் பாராட்டு
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வித்தியாசமான அணுகுமுறையில் விளையாடியது என முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 24-ந்தேதி கொடியேற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது.
75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், “தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்” என்று கூறினார்.
நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா அவசர வழக்கு
இளையராஜா இசையில் மைக்கேல் மதன் காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற “ராத்திரி சிவராத்திரி..” பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்: பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.