இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

Update:2025-09-12 09:02 IST
Live Updates - Page 6
2025-09-12 04:39 GMT

பி.சி.சி.ஐ. தலைவராகும் சச்சின்..? உண்மை நிலவரம் என்ன..?


பி.சி.சி.ஐ.-ன் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.


2025-09-12 04:37 GMT

தாய்மை என்பது வரம்.. அந்த வரம் எனக்கும் கிடைக்கும்- நடிகை சமந்தா


சமந்தாவும், 'பேமிலிமேன்' வெப் தொடர் இயக்குனரான ராஜ் நிடிமொருவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் பேசப்படுகிறது.


2025-09-12 04:23 GMT

அடுத்த உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது


இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.142க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


2025-09-12 04:05 GMT

வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு


ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மாமியார் மீது பவித்ரா வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், பவனுக்கும் 2021-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்திருந்தது. திருமணமான 3 மாதங்களிலேயே மாமனார், மாமியார் என்னை கொடுமைப்படுத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-09-12 03:57 GMT

ஜப்பானில் வசூல் வேட்டையாடி வரும் “வேட்டையன்”


ரஜினிகாந்தின் படங்கள் ரிலீசின்போது, ஜப்பானில் இருந்து ரசிகர் கூட்டம், இந்தியா வந்து, குறிப்பாக சென்னை வந்து படம் பார்த்து ரசித்து செல்வதும் வழக்கம். அந்தவகையில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிகண்ட 'வேட்டையன்' படம், கடந்த வாரம் 'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் ஜப்பானில் திரையிடப்பட்டது. இதற்கு அந்நாட்டு ரசிகர்களின் வரவேற்பு மிகுதியாக கிடைத்து வருகிறது.

இதுவரை 'வேட்டையன்' படத்துக்கு 48 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.4 கோடி வரை வசூல் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025-09-12 03:52 GMT

ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்


'லோகா' திரைப்படம் உலகளவில் ரூ 202 கோடி வசூலித்துள்ளது. வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை 'லோகா' திரைப்படம் படைத்துள்ளது.

2025-09-12 03:49 GMT

பாகிஸ்தானுக்கு எதிராக இதை செய்வாரா..? சூர்யகுமார் யாதவை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இதேபோல் செய்வாரா? என்று இந்திய முன்னாள் வீரர ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு உரியது என்று நான் கருதுகிறேன். ஒருவேளை இதே நிகழ்வு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி சமநிலையில் இருக்கும்போது அந்த அணியின் கேப்டன் சல்மான் ஆஹாவுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் சூர்யகுமார் இதை செய்வாரா?. நிச்சயம் செய்யமாட்டார். அந்த சமயத்தில் சஞ்சு சாம்சன் நல்ல விழிப்புணர்வுடன் செயல்பட்டார். என்னைப் பொறுத்த வரை பேட்ஸ்மேன் வெள்ளைக் கோட்டைக்கு வெளியே நின்றால் அவுட். இது விதிகளுக்குட்பட்டது. நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவித்துவிட்டார். பிறகு வெளியே இருங்கள்” என்று தெரிவித்தார். 

2025-09-12 03:47 GMT

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: களம் இறங்கி வெற்றி பெறுங்கள் - இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை


இந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த ஆட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.


2025-09-12 03:45 GMT

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகளிருக்கான 80 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 3-2 என்ற கணக்கில் போலந்து இளம் வீராங்கனை எமிலியா கோடர்ஸ்காவை போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. உலக குத்துச்சண்டையில் அவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதே பிரிவில் ஏற்கனவே மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் அரையிறுதியை எட்டி பதக்கத்தை உறுதி செய்தார்.


2025-09-12 03:44 GMT

ஆசிய கோப்பை: யுஏஇ-க்கு எதிரான ஆட்டம்.. இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருதை வென்றது யார் தெரியுமா..?


இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்