இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

Update:2025-08-13 09:35 IST
Live Updates - Page 4
2025-08-13 06:34 GMT

தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்தி கொள்ளுங்கள் என்றும் தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

2025-08-13 06:00 GMT

‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!


படம் நாளை வெளியாக உள்ளநிலையில், பட தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


2025-08-13 05:59 GMT

சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால்.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடாவடி பேச்சு


பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து அடாவடியாக பேசி வரும் நிலையில், பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால். இந்தியா ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம். இந்தியாவுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கப்படும்" என்று அடாவடியாக பேசியுள்ளர்.


2025-08-13 05:52 GMT

எகிறும் எதிர்பார்ப்பு... 'கூலி' படத்தை பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன..?


திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 'கூலி' திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


2025-08-13 05:48 GMT

9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-08-13 05:46 GMT

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

2025-08-13 05:44 GMT

திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு


அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

2025-08-13 04:55 GMT

ரெயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ரெயில்வே கட்டுப்பாட்டு தொலைபேசி மூலம் வந்த மிரட்டலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

2025-08-13 04:49 GMT

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


2025-08-13 04:47 GMT

நடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணமா..?


பிரபாசின் தந்தை வழி உறிவினர் அளித்துள்ள பேட்டியில், "சிவபெருமானின் ஆசி பொழியும்போது பிரபாஸ் திருமணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் பிரபாசின் திருமணத்திற்காக முயற்சி எடுத்து வருகிறேம். சிவபெருமானின் அருளாசியல் பிரபாசின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்