இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

Update:2025-09-14 09:10 IST
Live Updates - Page 2
2025-09-14 07:17 GMT

“ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் இதை விட இரு மடங்கு கூட்டம் வரும்..” - விஜய் பரப்புரை குறித்து சீமான் விமர்சனம்


கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

இசை இறைவனாக இளையராஜாவை பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும்போது இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதில் எங்களுக்கு பெருமை தான்.

திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும் ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 


2025-09-14 07:15 GMT

‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்; மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது’ - நிர்மலா சீதாராமன்


ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைந்துள்ளது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2025-09-14 07:14 GMT

ஐ.பி.எல்.: ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த ராகுல் திவேட்டியா... யாருக்கெல்லாம் இடம்..?


ஐ.பி.எல். தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு தனது ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை இந்திய வீரரான ராகுல் திவேட்டியா தேர்வு செய்துள்ளார்.

2025-09-14 07:12 GMT

மணிப்பூருக்கு இரண்டு ஆண்டுகளாக செல்லாததற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

2023ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த கலவரத்தில்

* 258 பேர் உயிரிழந்தனர்

* 1,108 பேர் காயமடைந்தனர்

* 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன

* 60,000 பேர் இடம் பெயர்ந்தனர்

* பல்லாயிரம் பேர் அகதிகள் முகாம்களில் இன்றும் இருக்கின்றனர்

இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. நேற்று மணிப்பூர் சென்ற மோடி அவர்கள் ஒரு வார்த்தை வருத்தும் தெரிவிக்கவில்லை, இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ 7,300 கோடி திட்டங்கள். ரூ 1,200 கோடி திட்டங்கள் என்று மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடியுமா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-09-14 07:11 GMT

வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி கிராமங்களில் சில வாரங்களுக்கு முன்பு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள், கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

கடந்த மாதம் 29-ந்தேதி, திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட பல மனுக்கள் தண்ணீரில் மிதந்தன. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2025-09-14 06:32 GMT

‘இந்தி மொழி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது’ - அமித்ஷா


நாடு முழுவதும் இன்று 'இந்தி மொழி நாள்'(இந்தி திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ், இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் 'இந்தி மொழி நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு மத்திய மந்திரி அமித்ஷா 'இந்தி மொழி நாள்' வாழ்த்து தெரிவித்துள்ளார். 


2025-09-14 06:30 GMT

நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? சுப்மன் கில் பதில்


இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அண்மையில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்தை பிடித்ததோடு பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார். 


2025-09-14 05:55 GMT

''அந்த ஹீரோ மிகவும் திறமையானவர்...ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை'' - ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடித்த ஹோம்பவுண்ட் படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்தப் படம் சமீபத்தில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது, அங்கும் பாராட்டுகளைப் பெற்றது.

2025-09-14 05:44 GMT

அண்ணா சிலைக்கு நாளை மரியாதை செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.

நாளை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-14 05:38 GMT

நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும் நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகி தமிழகத்தில் மழை அதிகளவு இருக்கும் என்றும், நடப்பாண்டில் அக். 3ஆவது வாரத்தில் பருவமழை தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்