இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Sept 2025 7:37 PM IST
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
- 14 Sept 2025 1:55 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1.அஞ்செட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
2.கெலமங்கலத்தில் ரூ.12 கோடியில் சாலைகள் அமைக்கப்படும்.
3.ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
4.கெலமங்கலம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்
5.ஓசூர் மாநகரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க புதிய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
- 14 Sept 2025 1:44 PM IST
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சரை கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14 Sept 2025 1:43 PM IST
ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்
சுழலுக்கு சாதகமான துபாய் மைதானத்தில் பாகிஸ்தானின் ஸ்பின்னர்களை சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதனால் இம்முறை பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு அவர்களுடைய ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வது அவசியம் என்று எச்சரித்துள்ளார்.
- 14 Sept 2025 1:38 PM IST
'சினிமாவில் திறமையை விட அது முக்கியம்'...- நடிகை டயானா
இந்த ஆண்டு வெளியான ''சாவா'' மற்றும் ''ஆசாத்'' படங்களால் ரசிகர்களை ஈர்த்த பாலிவுட் நடிகை டயானா பென்டி சில சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். திரைப்படத் துறையில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து அவர் பேசினார்.
- 14 Sept 2025 1:22 PM IST
தாய்லாந்தில் சிங்கங்களுடன் விளையாடும் நடிகை...வீடியோ வைரல்
தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்கு சுற்றுலா சென்ற நடிகை வைகா ரோஸ், அங்கு இரண்டு சிங்கங்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
- 14 Sept 2025 12:55 PM IST
‘பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்; நிச்சயம் மீண்டும் வருவேன்’ - விஜய்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், நேற்று திருச்சியில் தனது பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சி விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அரியலூரில் பேசிவிட்டு, குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் சென்றார்
ஆனால் பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்ற அடைந்தனர். இந்த நிலையில், பெரம்பலூரில் காத்திருந்த மக்களிடம் வருத்தும் தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.
- 14 Sept 2025 12:52 PM IST
நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செப். 16ஆம் தேதி) டெல்லிக்கு செல்ல உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.













