இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

Update:2025-08-17 09:21 IST
Live Updates - Page 4
2025-08-17 05:06 GMT

தவெக மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைப்பு


தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் சிரமப்பட்டனர் .இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.


2025-08-17 04:49 GMT

இணைய வழியில் பயிர் கடன்

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடங்கிவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2025-08-17 04:46 GMT

இன்று ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு

விழுப்புரம்: பட்டானூரில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழுஇன்று நடைபெறுகிறது. பாமக எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2025-08-17 04:42 GMT

காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2025-08-17 04:27 GMT

உடனடி பயிர்க் கடன் - புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கிக் கணக்கில் தொகை பெறும் திட்டத்தைத் தருமபுரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-08-17 04:19 GMT

இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-08-17 04:13 GMT

விசிக தலைவர் திருமாவளவனுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட என் சகோதரர் திருமாவளவனை வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

2025-08-17 04:11 GMT

 முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறன் பிறந்த நாளை ஒட்டி, தருமபுரியில் அவரது உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

2025-08-17 04:11 GMT

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரெயில் முன்பதிவு தொடங்கியது


தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள்.

அதன்படி, வரும் அக். 16 (வியாழன்) அன்று செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.


2025-08-17 04:08 GMT

அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. 'கேம் சேஞ்சராக' இருக்கும் - வெளியான முக்கிய தகவல்


இந்தியாவில் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் 12, 18 மற்றும் 28 என 4 அடுக்காக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பெரும் சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்