இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

Update:2025-09-17 09:10 IST
Live Updates - Page 2
2025-09-17 11:41 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்... நியூசிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகளும் மவுண்ட் மவுங்கானுயில் நடக்கின்றன.

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமீசன், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், பென் சியர்ஸ். டிம் சீபர்ட், இஷ் சோதி.

2025-09-17 09:51 GMT

தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி, சொங்கோடசிங்கனள்ளியில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி முன்விரோதத்தால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட பருவிதி பகுதியை சேர்ந்த ஆதி, உல்லட்டி கிராமத்தை ரக்‌ஷித் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-09-17 08:22 GMT

பெரியார் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை


தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பனையூரில் அக்கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



2025-09-17 08:14 GMT

ஓசூரில் நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தெரு நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோட்ட கூலித் தொழிலாளி முனி மல்லப்பா(50) என்பவர் உயிரிழந்தார்,

முன்னதாக தனியார் தோட்டத்தில் வேலைபார்த்த முனி மல்லப்பாவை அங்கு வந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு நேற்று மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முனி மல்லப்பா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-17 08:04 GMT

வாலிபர் சரமாரி வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரம்.. பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு


மயிலாடுதுறையில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


2025-09-17 07:57 GMT

விராட் கோலியின் பயோபிக்கை இயக்க மறுத்த இயக்குனர்...ஏன் தெரியுமா?

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. 

2025-09-17 07:34 GMT

“முகமூடியார் பழனிசாமி என்றுதான் இனி அழைக்க வேண்டும்..” - டிடிவி தினகரன் விமர்சனம்


உள்துறை மந்திரி அமித்ஷா வீட்டில் இருந்து முகத்தை மூடியபடி வர என்ன அவசியம்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். 


2025-09-17 07:32 GMT

 ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட அஜித்தின் ''குட் பேட் அக்லி''...ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித்தின் குட் பேட் அக்லி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

2025-09-17 07:31 GMT

''கில்லர்' படத்திற்கு 80 பேர் ஆடிஷன் வந்தார்கள்'... - நடிகை பிரீத்தி அஸ்ரானி

எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பிரீத்தி அஸ்ரானி அப்படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்