இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

Update:2025-09-17 09:10 IST
Live Updates - Page 3
2025-09-17 07:31 GMT

இளைஞர் கொலை - பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேரை விடுவித்தது காவல்துறை. காதல் விவகாரத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதி செய்ய வைரமுத்துவின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

2025-09-17 07:30 GMT

''அந்த நடிகையுடன் இன்னும் அதிக படங்கள் நடிக்க ஆசை'' - வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். இவர் தற்போது நடித்திருக்கும் படம் ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி''. இதில் இவருடன் ஜான்வி கபூர், சன்யா மல்கோத்ரா, ரோஹித் சரப், மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் அக்சய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

2025-09-17 07:04 GMT

புதிய சர்வதேச நகரம்

சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய சர்வதேச நகரம் செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும்" என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-17 06:49 GMT

திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? - ரஜினி சொன்ன பதில்

ரஜினிகாந்திடம், திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, நோ கமெண்ட்ஸ் என்று கூறி சென்றார். 

2025-09-17 06:45 GMT

போர் நிறுத்தம் - டிரம்பின் பேச்சை இந்தியா ஏற்கவில்லை

இந்தியா - பாக். போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என பாக். துணை பிரதமர் இஷாக் கூறியுள்ளார். வர்த்தகத்தை கருவியாக பயன்படுத்தி போரை நிறுத்தியதாக கூறிய அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

2025-09-17 06:45 GMT

பொன்முடி சர்ச்சைப் பேச்சு வழக்கு முடித்து வைப்பு

பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, சர்ச்சை பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தனி நபர் புகார் தாக்கல் செய்யலாம். புகார் அளித்தவர்களிடம், காவல்துறை முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டு

2025-09-17 06:37 GMT

நாய் போலவே மாறிய நபர்.. தமிழகத்தை உலுக்கிய மரணம்

ஓசூர், நாட்றாம்பாளையத்தைச் சேர்ந்த முனி மல்லப்பா கடந்த மாதம் 27ம் தேதி தெருநாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து உடல் நலன் தேறி வீட்டுக்கு திரும்பிய முனி மல்லப்பாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த முனி மல்லப்பா தண்ணீரைப் பார்த்தும் பயந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முனி மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2025-09-17 06:36 GMT

காரில் வன்னியர் சங்க கொடியை பொருத்திய ராமதாஸ்.. ஏன் தெரியுமா?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார்.வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்க கொடியை காரில் பொருத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.இதனிடையே, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் கடந்த வாரம் அறிவித்தார். தொடர்ந்து, அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2025-09-17 06:35 GMT

சபரிமலை கோவில் நடை திறப்பு – மாதாந்திர வழிபாடு தொடக்கம்

கேரளாவில் உள்ள சபரிமலை மலைக் கோவில் நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை முதலே மாதாந்திர பூஜை வழிபாடுகள் நடைபெறும். கோவில் செப்டம்பர் 21ஆம் தேதி மூடப்படும். இதற்கிடையில், திருவிதாங்கூர் தேவசம் வாரியம் தனது பிளாட்டினம் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 20ஆம் தேதி உலக ஐயப்ப சங்கமம் நடத்த திட்டமிட்டுள்ளது.

2025-09-17 06:29 GMT

பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்