இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

Update:2025-09-17 09:10 IST
Live Updates - Page 4
2025-09-17 06:28 GMT

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு


விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட வேண்டும் எனவும் ஐகோர்ட்டு நிர்ணயித்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கக்கோரி முறையிட்ட நிலையில், நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

2025-09-17 06:27 GMT

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது ஏன்? என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- மாண்புமிகு இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

2025-09-17 06:03 GMT

15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-17 06:01 GMT

பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள்; ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில், மிகவும் மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய என் அன்பான பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த் என அதில் பதிவிட்டுள்ளார்.

2025-09-17 05:58 GMT

''கமலுடன் இணைந்து நடிக்க ஆசை, ஆனால்''... - நடிகர் ரஜினிகாந்த்

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ள படம் பற்றிய அப்டேட்டை தெரிவித்தார்.

2025-09-17 05:48 GMT

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். இப்போதும் ஆக்டிவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார்

2025-09-17 05:16 GMT

நெல்லை: வடமாநில இளைஞர் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் மீது வட மாநில நபர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த கோவையைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தங்கப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-09-17 05:10 GMT

நேபாள கலவரத்தில் சிக்கிய பொதுமக்களின் உயிரை காத்த செந்தில் தொண்டைமான் - ஓபிஎஸ், டிடிவி தினகரன் பாராட்டு


பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செந்தில் தொண்டைமானின் பணி அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.


2025-09-17 05:08 GMT

திமுக முப்பெரும் விழாவுக்கு தயாரான மாநாட்டுத் திடல் -மு.க.ஸ்டாலின் பகிர்ந்த டிரோன் காட்சிகள்!


திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.


2025-09-17 05:07 GMT

உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் - உதயநிதி புகழாரம்

திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம் என உதயநிதி தெரிவித்துள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்