இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

Update:2025-09-18 08:58 IST
Live Updates - Page 6
2025-09-18 03:44 GMT

இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் - பியூஷ் கோயல்

மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் உட்கட்டமைப்பை அதிகரிப்பதுடன், முதலீடு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு மற்றொரு ஊக்கத்தை அளிக்கும். பல நாடுகள் இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

2025-09-18 03:42 GMT

திருப்பதி ஏழுமலையானை வழிபட வேண்டுமா..? டிசம்பர் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் இன்று வெளியீடு


திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு போன்றவை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

2025-09-18 03:40 GMT

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை


டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள டிரோனிகா நகரில் பதுங்கி இருந்த ரோஹித் கோதாரா-கோல்டி பரார் கும்பலைச் சேர்ந்த 2 பேரை சிறப்பு படையினர் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுண்ட்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர்.


2025-09-18 03:39 GMT

வைகை அணையில் இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


இன்று முதல் மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 68.80 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 733 கன அடி. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 669 கன அடி நீர் வெளியேறுகிறது.


2025-09-18 03:37 GMT

மலைத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி - கள்ளக்குறிச்சியில் சோகம்


தியாகதுருகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார். தேன்கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2025-09-18 03:33 GMT

இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும். அதன்படி புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.

2025-09-18 03:32 GMT

அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு: நாகையில் இன்று தொடக்கம் - எந்தெந்த மாவட்டத்தினர் பங்கேற்கலாம் தெரியுமா?


நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.

2025-09-18 03:30 GMT

ராசிபலன்: 18.09.2025: இன்று பண வரவு அதிகரிக்கும் ராசிகள் எது தெரியுமா..?


விருச்சிகம்

எதிர்பாராத திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் தாங்கள் நல்ல லாபத்தினை பெறுவர். பண வரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

Tags:    

மேலும் செய்திகள்